பின்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்து தங்கியிருந்த நபர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
இந்த வெளிநாட்டவர் சுகயீனம் காரணமாக திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
2018ஆம் ஆண்டு முதல் பெரலிஹெல-திஸ்ஸமஹாராம பகுதியில் இலங்கையர் ஒருவருடன் வாடகை அடிப்படையில் வசித்து வந்துள்ளார்.
இந்த வெளிநாட்டவர் Lofstrom Goren Wilhelm என அழைக்கப்படும் 78 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த நபர் தொடர்பான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.