முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்கள் தெரியுமா!

காலை உணவுகளானது அன்றைய நாள் முழுவதும் நம்மை நன்றாக உணரவைப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும், குடலின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

அப்படிப்பட்ட நன்மைகளை கொண்ட நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும் என்று கூறப்படுகிறது. நெல்லிக்காய் ஆனது இயற்கையாகவே உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை அகற்ற உதவுகிறது.

இதில் ஆன்டிஆக்ஸிடென்ட், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

100 கிராம் நெல்லிக்காயில் 44 கலோரிகள், 10.18 கிராம் கார்போஹைட்ரேட், 0.88 கிராம் ப்ரோடீன், 0.58 கிராம் கொழுப்பு, 4.3 கிராம் நார்ச்சத்து, 252mg வைட்டமின் சி, 290 IU வைட்டமின் ஏ, 25mg கால்சியம், 0.31mg அயன் மற்றும் 0.20mg பாஸ்பரஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்கள் தெரியுமா! | Food Health Benefits Of Gooseberry

வெறும் வயிற்றில் தினமும் 1 நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிரம்பியுள்ளதாள், இது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் தொற்று நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது.

இது தவிர, வைட்டமின் சி பல நோய்களைக் குறைக்க உதவுகிறது. மேலும், நெல்லிக்காயானது பருவகால இருமல் மற்றும் சளிக்கு எதிராகவும் போராட உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

நெல்லிக்காய் சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இதனை தினமும் சாப்பிட்டால் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்கள் தெரியுமா! | Food Health Benefits Of Gooseberry

இதன் காரணமாக சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது சுருக்கங்களை குறைப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் முடி உதிர்வைக் குறைப்பது மட்டுமல்லாமல் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், முன்கூட்டியே ஏற்படும் நரைமுடியைத் தடுக்கிறது.

இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

நெல்லிக்காய் ஆனது கெட்ட கொழுப்பை (எல்டிஎல்) குறைக்கவும், நல்ல கொழுப்பை (எச்டிஎல்) அதிகரிக்கவும் உதவுகிறது.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்கள் தெரியுமா! | Food Health Benefits Of Gooseberry

மேலும், இது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

எடை குறைப்பு

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் கொழுப்பை எரிக்க உதவுகிறது.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்கள் தெரியுமா! | Food Health Benefits Of Gooseberry

இதன் நார்ச்சத்து முழுமையான உணர்வை அளிப்பதோடு, பசி உணர்வு மற்றும் கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது.

இதன் காரணமாக இது எடை குறைப்புக்கு உதவுகிறது. அதே நேரத்தில் செரிமானத்தை மேம்படுத்தவும், நச்சுத்தன்மையை நீக்கவும் உதவுகிறது.

கண் பார்வை மேம்படுத்துகிறது

நெல்லிக்காயில் கரோட்டின் உள்ளது, இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கண்புரை, எரிச்சல், கண்களில் ஈரப்பதம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்கள் தெரியுமா! | Food Health Benefits Of Gooseberry

மேலும், நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கிறது. மேலும், இது நீரிழிவு பிரச்சைகளால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

நெல்லிக்காயில் சக்திவாய்ந்த ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் உள்ளது, இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் மூட்டுவலி போன்ற பிற பிரச்சனைகளை போக்க உதவுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.