முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூளைச்சாவடைந்து பரிதாபமாக உயிரிழந்த 21 வயது யுவதி: இறுதியில் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்

கேகாலை, கலிகமுவ பலபாகே பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 21 வயது யுவதியின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.

இரண்டு நோயாளர்களுக்கு வெற்றிகரமாக உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டதாகவும், இரு நோயாளிகளும் நலமுடன் இருப்பதாகவும் கேகாலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் சந்தன விஜேசிங்க நேற்று (15) தெரிவித்தாதுள்ளார்.

கேகாலை, கலிகமுவ பலபாகே பிரதேசத்தை சேர்ந்த சுபன்யா வீரகோன் என்ற 21 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூளைச்சாவடைந்து பரிதாபமாக உயிரிழந்த 21 வயது யுவதி: இறுதியில் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல் | Girl Eager To Donate Her Organs Before She Died 

கடந்த 9ஆம் திகதி காலை தலைவலி ஏற்பட்டதையடுத்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், யுவதியை காப்பாற்ற மருத்துவப் பணியாளர்கள் கடும் முயற்சி செய்த நிலையில், கடந்த 13ம் திகதி அவர் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து யுவதியின் உடல் நிலை குறித்து பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களிடம் தெரிவித்ததையடுத்து, அவரது கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்களை தானமாக வழங்க பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய,  (14) திகதி இரண்டு நோயாளர்களுக்கு கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளதாக கேகாலை பொது வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சிகிச்சை இணைப்பாளர் டொக்டர் தனுஷ்க ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

மூளைச்சாவடைந்து பரிதாபமாக உயிரிழந்த 21 வயது யுவதி: இறுதியில் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல் | Girl Eager To Donate Her Organs Before She Died 

உறுப்பு மாற்று சிகிச்சை

இது தொடர்பில் கேகாலை பொது வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சிகிச்சை இணைப்பாளர் டொக்டர் தனுஷ்க ஜயதிலக கூறியதாவது

கலிகமுவ, பல்லபன பத்தபாகே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் கடுமையான தலைவலியுடன் கடந்த 9ஆம் திகதி காலை கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக யுவதியை பரிசோதனை செய்தனர்.

இதன்போது அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. பின்னர் கண்டி, கொழும்பு போன்ற மருத்துவமனைகளுக்கு அனுப் அவரை காப்பாற்ற சிகிச்சை அளித்தோம்.ஆனால் கடந்த 13ம் திகதி  மூளைச்சாவு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தோம்.

மூளைச்சாவடைந்து பரிதாபமாக உயிரிழந்த 21 வயது யுவதி: இறுதியில் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல் | Girl Eager To Donate Her Organs Before She Died 

இறுதிக்கிரியைகள்

இந்த அறிவிப்பின் பிரகாரம், கடந்த 13ஆம் திகதி அவரது கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் இரண்டு கண்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கொழும்பு பொது வைத்தியசாலையில் இரண்டு நோயாளர்களுக்கு இணைக்கப்பட்டு, அந்த இரண்டு நோயாளிகளும் தற்போது மிகவும் குணமடைந்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

எங்கள் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினோம். நேற்று (15) அந்த இரண்டு உறுப்புகளும் மாற்றப்பட்டு நலமாக இருப்பதாக அறிந்தோம். தன் மகள் இறந்துவிட்டாலும், அவளது உறுப்புகளுடன் வேறு யாரோ வாழ்கிறார்கள் என்று கேட்பது மகிழ்ச்சி அளிக்கின்றது என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, சுபன்யா வீரகோனின் இறுதிக் கிரியைகள் நேற்று  (16) கலிகமுவவில் உள்ள பத்தபாவின் பொது மயானத்தில் நடைபெற்றுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.