முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒரு கைப்பிடி கொய்யா இலையால் உடம்பில் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை கரைப்பது முதல், ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பது வரை கொய்யா இலைகளின் மூலமாக எண்ணற்ற பலன்களை நாம் பெற முடியும். அவை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

அனைத்து தரப்பு மக்களும் வாங்கி சாப்பிடும் வகையில் குறைவான விலைக்கு கிடைக்கக்கூடிய பழங்களில் கொய்யாவும் ஒன்று.

கிராமப்புறங்களில் வீட்டில் வளர்க்கப்படுகின்ற பசுங்கொய்யா என்று அழைக்கப்படும் சிவப்பு நிற கூழ் கொண்ட பழமும், வர்த்தக ரீதியாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்ற பண்ணை கொய்யா என்று அழைக்கப்படுகின்ற வெள்ளை நிற கூழ் கொண்ட பெரிய அளவிலான பழமும் நாம் சாப்பிடுவதற்கு கிடைக்கின்ற பரவலான வகைகளாக உள்ளன.

கொய்யா இலை

எந்த வகை கொய்யா என்றாலும் அதன் சுவை அலாதியானது. விட்டமின் ஏ, விட்டமின் சி மற்றும் இரும்பு சத்து போன்றவற்றை கொண்ட இந்த கொய்யாவில் ஆண்டி ஆக்ஸிடென்ட் சத்துகள் நிறைந்துள்ளன.

ஒரு கைப்பிடி கொய்யா இலையால் உடம்பில் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா? | Guava Leaves Benefits Lifestyle Tips In Tamil

கொய்யா பழம் மட்டுமல்லாமல், கொய்யா இலைகளிலும் மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. இதனை அறிந்தவர்கள் கொய்யா இலைகளை தவறவிடுவதில்லை.

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை கரைப்பது முதல், ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பது வரை கொய்யா இலைகளின் மூலமாக எண்ணற்ற பலன்களை நாம் பெற முடியும். 

உடல் எடை குறையும் 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கொய்யாப்பழம் மற்றும் கொய்யா இலை ஆகியவை சிறந்த தேர்வாக அமையும்.

ஒரு கைப்பிடி கொய்யா இலையால் உடம்பில் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா? | Guava Leaves Benefits Lifestyle Tips In Tamil

ஒரு நடுத்தர அளவிலான கொய்யா பழத்தில் 37 கலோரிகள் மட்டுமே இருக்கும்.

ஆனால் அதை சாப்பிடும் போது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும் மற்றும் நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாது. அதேபோல கொய்யா இலையை காய்ச்சி டீ போல அருந்தினால் பசி கட்டுப்படும்.

குடல் நலன் மேம்படும் 

நம் உடலில் செரிமான சக்தியை மேம்படுத்தும் திறன் கொய்யா இலைகளில் உண்டு. இதில் உள்ள எண்ணற்ற நல்ல நுண்ணுயிர்கள், உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும்.

ஒரு கைப்பிடி கொய்யா இலையால் உடம்பில் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா? | Guava Leaves Benefits Lifestyle Tips In Tamil

மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வை கொடுக்கும். அசிடிட்டி மற்றும் குடல் வாய்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் கொய்யா டீ அருந்தலாம்.

நம் செரிமான கட்டமைப்பில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவியாக இருக்கும்.

சரும அழகு மேம்படும்

ஏதோ ஒரு காரணத்தால் சருமத்தின் அழகு பாதிக்கப்பட்டவர்கள் தினசரி கொய்யா டீ அருந்தலாம்.

ஒரு கைப்பிடி கொய்யா இலையால் உடம்பில் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா? | Guava Leaves Benefits Lifestyle Tips In Tamil

இதில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ்கள் சருமம் பொலிவு பெற உதவுகிறது.

சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புது செல்கள் உருவாக இது வழிவகை செய்யும். பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை மறையும்.

ரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்கும் 

ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற உயிர் அபாய பாதிப்புகளுக்கு சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால் போன்றவை தான் அடிப்படை காரணிகளாக இருக்கின்றன.

ஒரு கைப்பிடி கொய்யா இலையால் உடம்பில் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா? | Guava Leaves Benefits Lifestyle Tips In Tamil

ஆனால் தினசரி கொய்யா டீ அருந்தும் பட்சத்தில் உடலில் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் மற்றும் கெட்ட கொழுப்புகள் கரையும்.

நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்

இயற்கையாகவே உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நீங்கள் மேம்படுத்திட வேண்டும் என்று விரும்பினால் தினசரி கொய்யா டீ அருந்தலாம்  

ஒரு கைப்பிடி கொய்யா இலையால் உடம்பில் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா? | Guava Leaves Benefits Lifestyle Tips In Tamil

உடலில் உள்ள அலர்ஜிகள், கரகரப்பான தொண்டை, காயங்கள் போன்ற பல சிக்கல்களுக்கு இது நல்ல தீர்வை கொடுக்கும்.

உடலில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.