இயற்கையாகவே Straightening Hair பெறுவது என்பது பலரின் விருப்பமான ஒன்றாக காணப்படுகின்ற நிலையில், அதற்காக செலவுகள் அதிகம் என்பதனால் சிலர் கவலையடைவதுண்டு.
அத்தோடு, சிலர் அதிகமான தொகையை செலவழித்து தலை முடியை Straightening செய்வது வழக்கம்.
இந்தநிலையில், அதிக பணம் செலவழிக்காமல் இயற்கையான முறையில் Straightening Hair எவ்வாறு பெறலாம் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
01. முட்டை மற்றும் அரிசி மாவு
- இயற்கையான முறையில் முடியை நேராக்குவதற்கான எளிதான வழியாக முட்டை மற்றும் அரிசி மாவு கலவையைச் சேர்க்கலாம்.
- இதில் முட்டையில் உள்ள புரோட்டீன் சத்துக்களும், அரிசியில் உள்ள பல்வேரு ஊட்டச்சத்துக்களும் முடியை நேராக்க உதவுகிறது.
- அதன்படி, முடியில் முட்டை மற்றும் அரிசி மாவு ஹேர் மாஸ்கை பயன்படுத்துவது முடியை நேராக்குகிறது.
பயன்படுத்தும் முறை…!
- பாத்திரம் ஒன்றில் 1 முட்டையின் வெள்ளை கரு, 1/4 கப் அரிசி மாவு போன்றவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- இந்த கலவையில் 1/4 முல்தானி மிட்டியைக் கலந்து கொள்ளலாம்.
- முடியை நேராக்கி, பகுதிகளாகப் பிரித்த பின், இந்த கலவையை முடியில் தடவ வேண்டும்.
- இதை குறைந்தபட்சம் 1 மணி நேரம் அப்படியே வைக்கலாம்.
- இந்த பேஸ்ட் நன்கு காய்ந்த பிறகு, சல்பேட் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்தி முடியை நன்கு கழுவ வேண்டும்.
- இதை வாரம் இரு முறை செய்வதன் மூலம் தலைமுடியில் வித்தியாசத்தைக் கண்டறியலாம்.
02. முல்தானி மிட்டி
- புல்லர்ஸ் என்றழைக்கப்படும் முல்தானி மிட்டி அழகு பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- இது மென்மையான, பளபளப்பான மற்றும் வலுவான கூந்தலைப் பெற உதவக்கூடிய சிறந்த வீட்டு வைத்தியமாகக் கருதப்படுகிறது.
- முல்தானி மிட்டி ஒரு பழங்கால தீர்வாகும்.
- இவற்றை முடிக்குப் பயன்படுத்துவது உதிர்ந்த முடியைப் போக்குவதற்குப் பயன்படுகிறது.
- மேலும், தலைமுடியை இயற்கையாகவே நேராக்க உதவக்கூடியதாகும்.
- இது ஒரு லேசான சுத்திகரிப்பு முகவராக செயல்பட்டு தலைமுடியை சேதப்படுத்துவதில்லை.
பயன்படுத்தும் முறை…!
- ஒரு கப் அளவிலான முல்தானி மிட்டி எடுத்துக் கொண்டு, அதில் 1 முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 2 டீஸ்பூன் அளவு அரிசி மாவு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
- இந்தக் கலவையை மெல்லியதாக மாறும் வரை தண்ணீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- பிறகு, இந்தக் கலவையை தலைமுடியில் பயன்படுத்தலாம்.
- இது முடி முழுவதும் படரும் படி, அகலமான பல் பல் கொண்ட சீப்பை எடுத்து தலைமுடியை சீவ வேண்டும்.
- இதை 1 மணி நேரம் கழித்து பிறகு சாதாரண நீரில் கழுவ வேண்டும்.
- அதன் பிறகு, தலைமுடியில் பால் தெளித்து மேலும் 15 நிமிடங்களுக்குப் பிறகு தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு அலசலாம்.
03. தயிர் மற்றும் கற்றாழை ஜெல்
- கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, ஈ, ஃபோலிக் அமிலம், கோலின், பி1, பி2, பி3 மற்றும் பி6 போன்றவை நிறைந்துள்ளது.
- இது முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.
- மேலும் தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.
- இந்தக் கலவையைப் பயன்படுத்துவதன் மூலம் முடியை நேராக்கலாம்.
பயன்படுத்தும் முறை…!
- தயிர் மற்றும் கற்றாழை ஜெல் கலவை ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கு பாத்திரம் ஒன்றில் 2 முதல் 3 டீஸ்பூன் தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும்.
- இதனை மென்மையான பேஸ்ட் தயாராகும் வரை நன்கு கலக்க வேண்டும்.
- பிறகு இந்த பேஸ்ட்டை தலைமுடியில் தடவுவதற்கு முன், சீப்பு கொண்டு முடியை பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு, பேஸ்ட்டை சீப்பில் நனைத்து, முடியின் பகுதிகளாகப் பிரித்து தடவ வேண்டும்.
- இதை 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்.
- தயிர் மற்றும் கற்றாழை ஜெல் மாஸ்க்கை சுத்தம் செய்வதற்கு, லேசான ஷாம்பு பயன்படுத்த வேண்டும்.
- இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்துவதன் மூலம் முடி நேராக இருப்பதை உணரலாம்.