சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான சஞ்சோக் குப்தா(Sanjog Gupta) நியமிக்கப்பட்டுள்ளார்.
சஞ்சோக் குப்தா தற்போது ஜியோஸ்டார் ஃபார் ஸ்போர்ட்ஸ் அண்ட் லைவ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
உலகளாவிய ஊடகங்கள், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஊடகங்களிலும் அவர் மிகவும் மதிக்கப்படும் நபராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவுக்கே இரண்டு முக்கிய பதவிகள்
ஜெய் ஷா டிசம்பர் 1, 2024 அன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டார், இதன் மூலம் ஐசிசியின் மிகவும் சக்திவாய்ந்த இரண்டு பதவிகளை இந்தியாவே பெற்றுள்ளது சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், ஐசிசியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஏழாவது நபர் சஞ்சோக் குப்தா ஆவார்.

