மெனிங்கோகோகல்(Meningococcal) எனப்படும் மூளைக்காய்ச்சல் நோயைத் தடுக்க பஹ்ரைனுக்கு செல்லும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதற்கான தடுப்பூசி கட்டாயம் என சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இலங்கை தொழிலாளர்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பஹ்ரைன் அரசு மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் ஆலோசனையின் பேரில் இலங்கையர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகம் செயற்படுத்த உள்ளது.
உயிர் ஆபத்து
மெனிங்கோகோகல் நோய் என்பது நெய்சீரியா மெனிங்கிடிடிஸ்(Neisseria meningitidis) என்ற பற்றீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.

இது, மூளையை பாதிப்பதால் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உயிர் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
பஹ்ரைன் பல தசாப்தங்களாக இலங்கை தொழிலாளர்களுக்கு ஒரு பிரபலமான வேலைவாய்ப்பு இடமாக இருந்து வருகின்றது.

2024ஆம் ஆண்டுக்குள் 4,000இற்கும் அதிகமான இலங்கைப் பணியாளர்கள் பஹ்ரைனுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

