முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மீண்டும் தலைவராகியுள்ள தமிழர்

இந்திய விண்வெளி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழரான, வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவராக வி நாராயணன் பதவியேற்க உள்ளார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட வி. நாராயணன் வரும் 14 ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இஸ்ரோ தலைவராக பதவி வகிப்பார்
முன்னதாக, இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே. சிவன் பதவி வகித்து வந்தார்.

மீண்டும் ஒரு தமிழர் 

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இஸ்ரோவின் தலைவராக சிவன் பதவி வகித்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு தமிழர் இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மீண்டும் தலைவராகியுள்ள தமிழர் | India Apponted Tamil As Isro Chairman

இஸ்ரோவில் சுமார் 40 ஆண்டு காலம் பணியாற்றியுள்ள வி. நாராயணன் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

ரொக்கெட் மற்றும் விண்கல உந்துதல் தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர் வி நாராயணன்,இஸ்ரோவில் பல்வேறு திட்டங்களில் சிறப்பாக பணியாற்றியதற்காக விருதுகளை பெற்றுள்ளார்.

இஸ்ரோவின் கனவு

இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்றான ஆதித்யா விண்கல திட்டத்திலும் அவர் மிக முக்கிய பங்கை வகித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மீண்டும் தலைவராகியுள்ள தமிழர் | India Apponted Tamil As Isro Chairman

ககன்யான் திட்டம், இஸ்ரோவின் சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 ஆகிய திட்டங்களிலும் முக்கிய பங்கை அவர் வகித்துள்ளார்

இந்தநிலையில், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தை, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்