பாகிஸ்தான் (Pakistan), கனடா அணிகளை வீழ்த்தியதை போல் இந்திய அணியையும் வீழ்த்த முயற்சிப்போம் என்று அமெரிக்கா வீரர் ஆரோன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
ரி20 உலகக்கிண்ண தொடரில் இந்தியா (India)- அமெரிக்கா (America)அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று இரவு நடக்கவுள்ளதாக நிலையில் இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, இந்த போட்டியில் வெல்லும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் என்ற நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்து அமெரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஆரோன் ஜோன்ஸ் (Aaron Jones) பேசுகையில், ”இந்திய அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்ற எந்த பரபரப்பும் இல்லை.
கைவிடப்பட்ட இலங்கை – நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி
அமெரிக்கா வீரர்
நாங்கள் இந்த போட்டியை மற்றுமொரு போட்டியாகவே கருதுகிறோம். இந்திய அணி சிறந்தது எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் கடந்த இரு போட்டிகளில் பாகிஸ்தான், கனடா என்று 2 சிறந்த அணிகளை நாங்களும் வீழ்த்தி இருக்கிறோம். நாங்கள் விராட் கோலி (Virat Kohli), ரோகித் சர்மாவுக்கு Rohit Sharma) எதிராக விளையாடுகிறோம், இந்திய அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்று பெயரை நினைத்து அச்சம் கொள்ளப் போவதில்லை.
நாங்கள் எங்களின் ஆட்டத்தை விளையாடப் போகிறோம். நிச்சயம் இந்திய அணியை வீழ்த்த கடுமையாக முயற்சிப்போம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நியூயார்க் (New York) மைதானத்தில் நிச்சயம் இரு அணிகளுக்கும் ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அமெரிக்கா அணியிலும் பாதி பேர் இந்தியர்கள் தான்” என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாகஅரையிறுதிக்கு செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ள இந்திய அணிக்கு எதிரான போட்டியை மற்றொரு போட்டியாக பார்க்கிறோம் என்று அமெரிக்கா வீரர் ஜோன்ஸ் கூறியிருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு தோல்விகளைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு முதலாவது வெற்றி
இலங்கை அணியின் மோசமான ஆட்டம்: நிர்வாகத்தை சாடிய முன்னாள் அமைச்சர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |