தமிழக கடற்றொழிலாளர்கள் 7 பேர் யாழ். கடற்பரப்பில் ஒரு படகுடன் நேற்று அதிகாலை
கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் நடவடிக்கையில் ஈடுபட்ட
குற்றச்சாட்டிலேயே மேற்படி கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம், இராமேஸ்வரம் பகுதியில் இருந்து இன்று அதிகாலை TN/10/MM/0746 என்ற
இலக்கம் கொண்ட விசைப்படகில் பயணித்த கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் அனைவரும் காங்கேசன்துறை கடற்படைத்
தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் விசாரணைகள் மற்றும் மருத்துவ
பரிசோதனைகளின் பின்னர் நீரியல் வளத்துறையினர் ஊடாக நீதிமன்றத்தில்
முற்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 படகுகளுடன் 181 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

