முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ்த் தேசியம் தொடர்ந்து காக்கப்பட வேண்டும்: கந்தையா பாஸ்கரன்

இந்த மண்ணிலே தமிழ்த் தேசியம் தொடர்ந்து நிலைத்திருக்கும், அது காக்கப்பட
வேண்டும் என ஐபிசி தமிழ் மற்றும் ரீச்சா நிறுவனங்களின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் தீபச்செல்வனின் (Tīpaccelvan̲) சயனைட் நாவல் அறிமுக விழா நேற்று (11) மாலை இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியம் 

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பிற்பகல் மூன்று மணியளவில் யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியம் தொடர்ந்து காக்கப்பட வேண்டும்: கந்தையா பாஸ்கரன் | Ipc Tamil Founder Calls Safeguard Tamil Identity

நிகழ்வுக்கு கலைப்பீடாதிபதி எஸ். ரகுராம் தலைமை தாங்கிய நிலையில், பிரதம
விருந்தினராக ஐ.பி.சி தமிழ் மற்றும் ரீச்சா நிறுவனர் கந்தையா பாஸ்கரன் கலந்து
சிறப்பித்துள்ளார்.

நடத்தப்பட்ட கொடுமைகள்

இது தொடர்பில் நிகழ்வில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த மண்ணிலே தமிழ்த் தேசியம் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது.

தமிழ்த் தேசியம் தொடர்ந்து காக்கப்பட வேண்டும்: கந்தையா பாஸ்கரன் | Ipc Tamil Founder Calls Safeguard Tamil Identity

அது காக்கப்பட
வேண்டும், தேசிய விடுதலைக்கான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்
என்பதற்கு ஒரு சில எழுத்தளார்கள் அடையாளமாக இருக்கின்றார்கள்.

அதில்
தீபச்செல்வனும் ஒருவர், எம் இனத்தின் மீது நடத்தப்பட்ட கொடுமைகள் மற்றும் நாம் கடந்து
வந்த பாதைகள் எல்லாமே எம் இளைஞர்களுக்கு தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வருகின்றது.

ஏராளமான பொறுப்புகள்

அதனை தொடர்ந்து கடத்தி செல்ல வேண்டிய பொறுப்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு
இருக்கின்றது.

தமிழ்த் தேசியம் தொடர்ந்து காக்கப்பட வேண்டும்: கந்தையா பாஸ்கரன் | Ipc Tamil Founder Calls Safeguard Tamil Identity

இதன் உள்ளடக்கம் மிக ஆழமானது என்பதாலேயே இந்த புத்தகத்தை வாங்கி
மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என முடிவு செய்தேன்.

ஒவ்வொரு மாணவரும் இதனை
படித்து மற்றைய மாணவர்களையும் படிக்க வையுங்கள், உங்கள் கைகளிலே ஏராளமான
பொறுப்புகள் உள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்