முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காஸாவில் மக்கள் படுகொலை: பள்ளியில் பதுங்கியவர்களை நோக்கி தாக்குதல்

இஸ்ரேல் (Israel) நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் (Gaza) 52 பேர் கொல்லப்பட்டுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்களில் 36 பேர் பள்ளிகளில் தஞ்சம் அடைந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு, பலஸ்தீனத்திலுள்ள (Palestine) காஸா மீது இஸ்ரேல் இராணுவம் கடந்த வாரத்திலிருந்து தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

பதுங்கு குழி

முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகளில் உள்ள ஹமாஸ் படையினரை அழிக்கும் நோக்கத்தில் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து வருகின்றது.

காஸாவில் மக்கள் படுகொலை: பள்ளியில் பதுங்கியவர்களை நோக்கி தாக்குதல் | Israeli Attack On Gaza School

இதன்படி, காஸாவின் டெய்ர்-அல்-பாலா பகுதியில் உள்ள பள்ளியைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதலை இன்று அதிகாலை (மே 26) நடத்தியது.

இதில் பெண்கள், குழந்தைகள் என 36 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

 தாக்குதலில் உடமை

இஸ்ரேல் தாக்குதலில் உடமைகளை இழந்த குடும்பத்தினர் இப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், இரவு உணவை முடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்த போது இஸ்ரேல் இராணுவம் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.

இதேபோன்று ஜபாலியா பகுதியில் நடத்தப்பட்டத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் கொல்லப்பட்டனர்.

காஸாவில் மக்கள் படுகொலை: பள்ளியில் பதுங்கியவர்களை நோக்கி தாக்குதல் | Israeli Attack On Gaza School

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்புகள் பள்ளியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துவதாகக் கிடைத்த உளவுத் துறை தகவலைத் தொடர்ந்து பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த மார்ச் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதனை ஹமாஸ் மீறியதாக, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தது.

பிணைக் கைதி

ஹமாஸ் படையினரை முற்றிலும் அழிக்க வேண்டும் என்றும், எஞ்சியுள்ள பிணைக் கைதிகளை விடுக்கும் நோக்கத்திலும் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றது.

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காஸாவில் 54,000 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

காஸாவில் மக்கள் படுகொலை: பள்ளியில் பதுங்கியவர்களை நோக்கி தாக்குதல் | Israeli Attack On Gaza School

இதில், பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலால் காஸாவின் 90% மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், கூடாரத்திற்கு கீழ் வாழ்ந்து வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.