முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பூநகரியில் போக்குவரத்து வசதிகளை கோரி போராட்டம் முன்னெடுப்பு

கிளிநாச்சி (Kilinochchi) – பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முட்கொம்பன் கிராமத்துக்கான
போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரியும் தமது பிரதான வீதியை
புனரமைத்து தருமாறு கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, பிரதேச பொது அமைப்புக்களால் இன்றைய தினம்
(03.01.2025) பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட
முட்கொம்பன் அரசபுரம் செக்காலை நேரடம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார்
800க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான போக்குவரத்து வசதியின்மை மற்றும்
குறித்த கிராமத்துக்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமை என்பவற்றைக் கண்டித்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மனு கையளிப்பு 

இந்நிலையில், போராட்டத்தின் போது சம்பவ இடத்துக்கு வந்த பூநகரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
போராட்டக்காரர்களோடு நடத்திக் கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த
போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

பூநகரியில் போக்குவரத்து வசதிகளை கோரி போராட்டம் முன்னெடுப்பு | Kilinochci People Protest Today For Transports

அத்துடன் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் பொதுமக்கள் பூநகரி பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்
ஆகியோருக்கான மனுக்களும் கையளிக்கப்பட்டுள்ளன. 

மேலும், வடக்கு மாகாண ஆளுநருக்கான மனு பூநகரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளரிடம் பொது அமைப்புக்களால்
கையளிக்கப்பட்டுள்ளது. 

பூநகரியில் போக்குவரத்து வசதிகளை கோரி போராட்டம் முன்னெடுப்பு | Kilinochci People Protest Today For Transports

பூநகரியில் போக்குவரத்து வசதிகளை கோரி போராட்டம் முன்னெடுப்பு | Kilinochci People Protest Today For Transports

பூநகரியில் போக்குவரத்து வசதிகளை கோரி போராட்டம் முன்னெடுப்பு | Kilinochci People Protest Today For Transports

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்