முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் : அநுர அரசை எச்சரிக்கும் மனோஜ் கமகே

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) உயிரச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையிலும் அவருடைய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஆளும் தரப்பு சட்டத்தின் முன் பதிலளிக்க நேரிடும் என அவரின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே (Manoj Gamage) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்று (24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “ஜனாதிபதி என்ன சொல்கிறார் என்று அமைச்சரவை உறுப்பினர்களுக்கு தெரியாது. அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது ஜனாதிபதிக்குத் தெரியாது. 

முன்னாள் ஜனாதிபதிகள்

மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதாக நினைத்துக்கொண்டு மனம் போனபோக்கில் பேசிக் கொள்கிறார்கள். மகிந்த ராஜபக்ச இந்த
நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் : அநுர அரசை எச்சரிக்கும் மனோஜ் கமகே | Mahinda Security Govt Ignored Intelligence Report

அதேபோல் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga), மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஆகியோர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர்கள்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட
அரச உத்தியோகபூர்வ இல்லங்களை மீளப் பெறுவதாக ஆளும் தரப்பு குறிப்பிடுகிறது. ஒன்று வீடு வழங்கப்படும் அல்லது மாதம் 30 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதி தனது பதவிக்கு பொருத்தமான வகையில் பேச வேண்டும். ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொருத்தமான வீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வீடு ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர் வசிக்கக்கூடிய வகையில் இருத்தல் வேண்டும் என்பதை ஆளும்தரப்புத் தெரிந்து கொள்ளவேண்டும்.

இராணுவப் பாதுகாப்பு 

சட்டத்தை பற்றி போதிய அறிவு இல்லாவிடின் சட்ட நிபுணர்களிடம் ஆளும் தரப்பு ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் ஆளும்தரப்பு பாதாள குழுக்களை போல் சண்டித்தனமாகச் செயற்படக்கூடாது.

மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் : அநுர அரசை எச்சரிக்கும் மனோஜ் கமகே | Mahinda Security Govt Ignored Intelligence Report

மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுகிறது என்று புலனாய்வுப்பிரிவு முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் மற்றும் சலுகை தொடர்பில் ஆராய்ந்த குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்தபோதும் அதனைக் கருத்திற் கொள்ளாது அவருக்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டு, பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு ஆளும்தரப்பும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை மற்றும் சலுகைகள் தொடர்பில் ஆராய்ந்த குழுவும் பொறுப்புக் கூறவேண்டும்.

இந்தக் குழுவின் முழுமையான அறிக்கையை தகவலறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். அதனைத் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.