முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய பிரஜையின் பயணப்பொதியை திருடிய சந்தேக நபர் கைது

தொடருந்தில் பயணித்த இந்திய பிரஜை ஒருவரின் பயணப் பொதியை திருடிய சந்தேக நபர்
ஒருவர் ஹட்டன் (Hatton) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(22) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே தொடருந்தில் பயணித்த இந்திய
பிரஜையின் பயணப் பொதியே இதன்போது திருடப்பட்டுள்ளது.

கைது 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் , உடரட மெனிகே தொடருந்தின் மூன்றாவது பெட்டியில் பயணித்த இந்திய பிரஜையின் பயணப்
பொதியை, இங்குருஓயா மற்றும் கலபட ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு இடையில் குறித்த
சந்தேக நபர் களவாடியுள்ளார்.

இந்திய பிரஜையின் பயணப்பொதியை திருடிய சந்தேக நபர் கைது | Man Arrested For Stealing Indian Luggage In Hatton

இதனையடுத்து, காணாமல் போன பயணப் பொதி குறித்து தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகளிடம்
முறைப்பாடு செய்ததையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேக நபரை காணாமல் போன
பயணப் பொதியுடன் கைது செய்து, அவரை ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணை

சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபர்
மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்றும், அவர் கண்டியிலிருந்து
ஹட்டனுக்கு தொடருந்தில் பயணிக்க  டிக்கெட் பெற்றிருந்துள்ளதாகவும்
தெரிவித்தனர்.

இந்திய பிரஜையின் பயணப்பொதியை திருடிய சந்தேக நபர் கைது | Man Arrested For Stealing Indian Luggage In Hatton

அண்மைக்காலமாக மலையக தொடருந்து பாதையில் இயக்கப்படும் பயணிகள் தொடருந்துகளில் இதுபோன்ற
திருட்டுகள் அடிக்கடி நடப்பது குறித்து  பாதுகாப்புப் அதிகாரிகளுக்கு
தகவல்கள் கிடைத்துள்ளதாக தொடருந்து நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்