முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை நாளை(8) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

தேசபந்துவை பதவியில் இருந்து நீக்குமாறு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்கு சமர்ப்பித்துள்ள பிரேரணை தொடர்பில் குறிப்பிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு சபாநாயகருக்கு பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.  

குற்றச்சாட்டுக்கள்

இந்த பிரேரணையில் அவரது தவறான நடத்தை, பதவியை தவறான முறையில் பயன்படுத்தியமை, அவர் தனது பொலிஸ்மா அதிபர் பதவியை பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை அவரது பதவிக்காலத்தில் முறையற்ற விதத்தில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு | Motion Remove Deshabandhu Office Submit Parliament

2022ஆம் ஆண்டும் 5ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் உயர் பதவியில் இருக்கின்ற அரச அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பின்பற்றுவதற்கான யோசனையாகவே இந்த பிரேரணை நாளைய தினம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பிரேரணை

அரச பதவியை தவறான முறையில் பயன்படுத்திய ஒரு நபரே தேசபந்து தென்னகோன். அதுதொடர்பில் பொறுப்புக்களை நிறைவேற்றும் நாடாளுமன்றமாக செயற்பட உள்ளது.

தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு | Motion Remove Deshabandhu Office Submit Parliament

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக இரண்டாம் வாசிப்பு மீதான பிரேரணையாகவே நாளை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. பிரேரணை வாக்கெடுப்பின் பின்னர் நிறைவேற்றப்படும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்