ஒரு முஸ்லிம் எம்.பி ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றையதினம்(21) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொலை மிரட்டல்
புத்தளம் மருத்துவமனை குறித்து நான் ஒரு கேள்வியை எழுப்பிய பிறகு எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக ஒரு நாடாளுமன்ற சிறப்புரிமை பிரச்சினையை எழுப்புமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவுறுத்தியுள்ளார்.


