முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு பொது வைத்தியாசாலை குறித்து ரவிகரன் எம்.பி வெளியிட்ட தகவல்

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட பொது வைத்தியாசாலையில் காணப்படும் வளப் பற்றாக்குறைகள்
தொடர்பில்  சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா
ரவிகரன் (T. Raviharan) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பிரதமருடைய கவனத்திற்கும் தாம்
கொண்டு வந்து பொதுவைத்தியசாலையில் நிலவும் சிக்கல்
நிலமைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் இன்று (17) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வளப் பற்றாக்குறைகள்

 அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலை வைத்தியசாலை நிர்வாகத்தினர் அண்மையில்
என்னைச் சந்தித்து, வைத்தியசாலையிலுள்ள வளப்பற்றாக்குறை தொடர்பில்
கலந்துரையாடினர்.

முல்லைத்தீவு பொது வைத்தியாசாலை குறித்து ரவிகரன் எம்.பி வெளியிட்ட தகவல் | Mullaitivu Hospital Resource Shortages Raviharan

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் கண்வைத்தியர்
இல்லாதநிலமை, ஆண் நோயாளர்களுக்கானதும், பெண் நோயாளர்களுக்குமான விடுதிப்
பற்றாக்குறையால் நோயாளர்களைப் பராமரிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் உள்ளிட்ட
வைத்தியசாலையின் பல்வேறு வளப் பற்றாக்குறை தொடர்பில் வைத்தியசாலை
நிர்வாகத்தினர் என்னிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்தோடு வைத்தியசாலையில் நிலவும் இந்த வளப் பற்றாக்குறைகள் தொடர்பிலான மனு ஒன்றினையும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் என்னிடம் கையளித்திருந்தனர்.

சுகாதார அமைச்சு

இந்தநிலையில் இது தொடர்பில் நானும் சக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கமும் சேர்ந்து குறித்த வைத்தியசாலை பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சின்
கவனத்திற்கு கொண்டுவந்தோம்.

முல்லைத்தீவு பொது வைத்தியாசாலை குறித்து ரவிகரன் எம்.பி வெளியிட்ட தகவல் | Mullaitivu Hospital Resource Shortages Raviharan

அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின்போது பிரதமருடைய
கவனத்திற்கும் கொண்டுவரவுள்ளேன்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் காணப்படும்
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொடர்ந்தும் கவனம் செலுத்தப்படுமென துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.