முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். கடற்பகுதிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பில் புலனாய்வாளர்கள்

யாழ்ப்பாணம் – குடாநாட்டின் கடல் பகுதியில் அதிகமாக கடற்படை கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுபாப்பு அமைச்சின் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிலாபம், தெவுந்துர கடல் பகுதிகளிலும் கடற்படை ரோந்துகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் யாழ்ப்பாணம் கடல் மார்க்கத்தை அதிகம் பயன்படுத்துதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. 

சட்டவிரோத செயற்பாடுகள்

யாழ். கடல் மார்க்கத்திலேயே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் தப்பிச் செல்கின்றனர்.

யாழ். கடற்பகுதிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பில் புலனாய்வாளர்கள் | Navy Surveillance Increased In Jaffna Sea Areas

அத்தோடு சிலாபம் – தெவுந்துர கடல் பகுதிகளிலும் போதை பொருள் கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் அதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதான புலனாய்வு தகவல்களை அடுத்தே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் கஞ்சிபானி இம்ரான் யாழ்.கடல் வழியாகவே இந்தியா தப்பில் சென்றார். அண்மையில் நோபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியும் ஜே.கே.பாய் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரே கடற்றொழில் படகின் மூலம் இந்தியாவுக்குச் சென்றனர். 

யாழ். கடற்பகுதிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பில் புலனாய்வாளர்கள் | Navy Surveillance Increased In Jaffna Sea Areas

தென்பகுதி கடற்பகுதி அலைகளின் வேகம் குறைவானதாக காணப்படுவதால் சர்வதேச கடலில் இலங்கைக்கு வரும் போதை பொருட்களை சிறிய கடற்றொழில் படகுகளின் மூலம் கரைக்கு கொண்டு வருவது இலகுவானதாக இருப்பதால் தென்கடற் பகுதி போதைபொருள் கடத்தலுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

அது மட்டுமல்ல, தென்பகுதி அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பும் காரணமாகும். இப்போது தென்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் கடத்தல்காரர்கள் வழிகளை மாற்றியமைக்க கூடும் எனவும் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்