நாடாளுமன்ற பதவிகளுக்கு உயர் அதிகாரிகளை நியமிக்கும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற ஊழியர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில், தற்போது பணிபுரியும் அதிகாரிகளின் பதவி உயர்வு முறைக்கே பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெளியில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்துவதால் நீண்டகாலமாக நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக ஊழியர்கள் பலரும் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆட்சேர்ப்பு
அதன்போது, நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கு அரச நிர்வாக சேவை ஊழியர்களே ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அண்மையில், நாடாளுமன்ற உயர் அதிகாரிகளின் கலந்துரையாடலில் இவ்விடயம் விரிவாகப் கலந்துரையாடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.