நிகழ்நிலையில் (Online) பணத்தை மாற்றும் போது கணக்கில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டணம் ஐந்து ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், புதிய கட்டண திருத்தத்தின் மூலம் நிகழ்நிலையில் பணத்தை மாற்றும் போது கணக்கிலிருந்து வசூலிக்கப்படும் தொகை ரூபாய் 25 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசூலிக்கப்படும் தொகை
இதற்கு முன்பு, ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை மாற்றும் போது பணம் அனுப்புபவரின் கணக்கிலிருந்து முப்பது ரூபாய் கூடுதலாக வங்கி கட்டணம் வசூலிக்கும்.
இந்தத் திருத்தம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) சமீபத்திய நாட்களில் கலந்துரையாடல்களை நடத்திய நிலையில் தற்போது குறித்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.