தெஹிவளை -கல்கிஸ்ஸை மாநகராட்சிக்குட்பட்ட வீதிகளுக்கான பெயர்ப்பலகைகளுக்கு ஆயுர்வேத மசாஜ் நிலையங்களின் அனுசரணை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் நிர்வாகத்தின் கீழ் தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகராட்சி செயற்படத் தொடங்கியதன் பின்னர், மாநகராட்சிக்கு உட்பட்ட வீதிகளின் பெயர்ப்பலகைகளில் விளம்பரங்களை காட்சிப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் டெண்டர் கோரப்பட்ட நிலையில் , தற்போதைக்கு ஆயுர்வேத மசாஜ் நிலையங்களுக்கு குறித்த அனுசரணைக்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
மசாஜ் நிலையங்களின் அனுசரணை
இதன் காரணமாக மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட சகல வீதிகளிலும் மசாஜ் நிலையங்கள் தங்கள் விளம்பரங்களை சட்டரீதியாக காட்சிப்படுத்த முடிந்திருப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர் மருத்துவர் சமல் சஞ்சீவ குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் பெரும்பாலான மசாஜ் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அவ்வாறான மசாஜ் நிலையங்களின் அனுசரணையைப் பெற்றுக் கொண்டிருப்பது தவறான முன்னுதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.