முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நடாத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கடற்றொழில் கிராமத்தை சேர்ந்த  5 பேர் கடற்றொழிலுக்கு சென்றனர்.

கோடியக்கரை தென்கிழக்கே கடற்றொழிலில் ஈடுபட்ட  குறித்த நபர்களை அதிவேக
படகில் வேகமாக வந்த 6 பேர் கொண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் தடுத்து நிறுத்தி
கத்திமுனையில் தாக்குதலை நடத்தினர்.

கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் 

இதனையடுத்து, ஆயுதங்களால் தாக்கி கடற்றொழிலாளர்களிடம் இருந்த
வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் உள்ளிட்ட தளபாட பொருட்களை கொள்ளையடித்துச்
சென்றனர்.

இதேபோல அடுத்தடுத்து சுற்றி வளைத்த இலங்கை கடற்கொள்ளையர்கள்
செருதூர் கிராமத்தை சேர்ந்த 7 கடற்றொழிலாளர்கள், வெள்ளப்பள்ளம் கடற்றொழில் கிராமத்தை
சேர்ந்த 5 கடற்றொழிலாளர்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் | Pirates Attack Fishermen In Naga District

காயமடைந்த 17 கடற்றொழிலாளர்கள்  நாகை ஒரத்தூர் அரசுக் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்
பெற்றுவருகின்றனர்.

இந்தநிலையில், மற்றைய கடற்றொழிலாளர்கள் கடற்கொள்ளையர்களிடம் உடமைகளை
இழந்து கரைத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்திய எல்லையில் கடற்றொழிலில் ஈடுபட்ட  தங்களை அதிவேக படகில் வந்து சுற்றிவளைத்து இலங்கை
கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இரும்பு, கத்தி , உள்ளிட்ட
ஆயுதங்களை வைத்து கொடூரமாக தாக்கிதாகவும் காயமடைந்த கடற்றொழிலாளர்கள் வேதனை
தெரிவித்துள்ளனர்.

வேலை நிறுத்த போராட்டம்

எனவே இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு
தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்தி தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், உரிய
நிவாரணமும் வழங்க வேண்டுமென படுகாயமடைந்த கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் | Pirates Attack Fishermen In Naga District

நாகை மாவட்ட கடற்றொழிலாளர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி சுமார் 10 லட்சம்
பெறுமதியான தளபாட பொருட்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுள்ளதாக தமிழக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் தாக்குதல் நடத்துவது
தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் வரை பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.