முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தடையில்லா மின்சாரம் : வாக்கு கொடுத்த அடுத்த நிமிடம் மின்வெட்டு (காணொளி)

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடி (Kumara Jayakody) கலந்து கொண்ட கூட்டத்தில் சிறிது நேரம் மின்வெட்டு ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று (29.03.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழில் மின் தடை

யாழ்ப்பாணத்தில் 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்குவோம் என வலு சக்தி அமைச்சர் உரையாற்றி விட்டு அமர்ந்த சிறிது நேரத்தில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

இதனால் சிறிது நேரம் நிகழ்வில் தடங்கல் ஏற்பட்டது. அதன் பின்னர் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இன்று மின் தடை சிறிது நேரம் ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாண அலுவலகம் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் இது தொடர்பில் தகவலை சமூக ஊடகத்தில் ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

மின்சார சபை

இதனையடுத்து, ஊடகவியலாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு விரைந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் “நான் அப்ப கோப்பை அல்ல, அனைவரும் இணைந்து மின் ஆழியை நிறுத்தினால் மின்சாரம் இல்லாது போகும்” என கூறி சென்றுள்ளார்.

இதனிடையே ஊடகவியலாளர்கள் மின்சார துண்டிப்பு தொடர்பில் மின்சார சபையுடன் தொடர்பு கொண்டே செய்தியினை உறுதிபடுத்தியிருந்தனர். 

இந்நிலையில், மீண்டும் திடீரென ஊடகவியலாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு விரைந்த இளங்குமரன், மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் தெரியாமல் பேசிவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்கள் “நாம் செய்தியினை வெறுமனே உறதிபடுத்தாது வெளிப்படுத்தவில்லை, நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு முதலில் மின்சார சபையை கேட்டுவிட்டு ஊடகவியலாளர்களுடன் இவ்வாறு பேசியிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

செய்திகள் : பிரதீபன் / கஜிந்தன் 

GalleryGalleryGalleryGallery

https://www.youtube.com/embed/6YEIJEuuYe0

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.