ஹட்டன் பிரதான நகரில் உள்ள உணவகங்கள் , மரக்கறி விற்பனை நிலையங்கள் மற்றும் இதர வர்த்தக நிலையங்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த சோதனை நடவடிக்கை நேற்று(1) ஹட்டன் டிக்கோயா நகரசபையின் வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அம்பகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது திகதி காலாவதியான உணவு பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய
சுகாதார நடை முறைகளை பின்பற்றாத பலசரக்கு விற்பனை நிலையங்கள்
கண்டுபிடிக்கப்பட்டது.
எச்சரிக்கை
இதனையடுத்து, உணவக ஊழியர்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில்
எடுத்துரைத்ததுடன் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள்
சிலருக்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

இதில் திகதி காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த உணவகங்கள் மீது வழக்கு
தாக்கல் செய்வதற்கு பொது சகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.






