தேசிய தைப்பொங்கல் விழாவானது இன்றையதினம் (18) யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை துர்கா தேவி
தேவஸ்தானத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பொங்கல்
நிகழ்வினை தொடர்ந்து ஊர்வலமாக தெல்லிப்பழை யூனியன்
கல்லூரி வரை சென்று அங்கு பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கலாசார நிகழ்வு
இதன்போது, சைவநெறிச்சுடர் என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன்போது இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, யாழ்ப்பாண துணைத்தூதுவர் சாய் முரளி,
புத்தசாசன் கலாச்சார அமைச்சர் கலாநிதி ஹனிதும சுணில் செனவி, கடற்தொழில்
நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் விவகார அமைச்சர்
சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர்களான மகிந்த ஜெயசிங்க, சுந்தரலிங்கம்,
பிரதி அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஶ்ரீபாவனந்தராஜா,
ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.
செய்தி-தீபன்
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா (Santosh Jha) இன்று (18) நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்கவுள்ளார்.
சந்தோஷ் ஜா இரு நாள் பயணமாக நேற்று (17) யாழ்ப்பாணம் (Jaffna) வருகை தந்துள்ளார்.
இந்தநிலையில், அவர் நேற்று மாலை வடக்கு மாகாண
ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
தேசிய பொங்கல் விழா
அத்தோடு, இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெறும்
நிகழ்வொன்றில் அவர் கலந்து கொண்டுள்ளார்.
இதேவேளை, இன்று மதியம் தெல்லிப்பழையில் நடைபெறும் தேசிய பொங்கல் விழாவிலும்
அவர் பங்கேற்றுவிட்டு கொழும்பு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.