இலங்கையில் வேகமாகப் பரவி வரும் சின்னம்மையை கட்டுப்படுத்த அம்மைத் தடுப்பூசி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு (Ministry Of Health) தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில் அம்மைத் தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது, “20-30 வயதுக்கிடைப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை பெறாத, ஒரு தடுப்பூசி மாத்திரம் பெற்ற, தடுப்பூசி வழங்கப்பட்டமைக்கான உரிய சான்றுகளற்ற அனைவருக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்படும்.
தடுப்பூசிகள் வழங்கப்படும்
தெரிவு செய்யப்பட்ட12 மாவட்டங்களில் 206 மருத்துவ அதிகாரப் பிரிவுகளின் கீழ் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
9 மாதங்களுக்கு மேற்பட்ட, 19 வயதுக்கு உட்பட்ட தடுப்பூசி பெறாதவர்களுக்கும் சின்னம்மை தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.“ என தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் சில மாகாணங்களில் பன்றிக் காய்ச்சல் நோய் பதிவாகியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.