முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் குளிர்பானம் அருந்திய யுவதிக்கு நேர்ந்த கதி! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி

கொழும்பு(Colombo) – புறக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை(31.12.2024) இடம்பெற்றுள்ளதாக கொழும்பு டாம் வீதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 31 ஆம் திகதி கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு 19 வயதுடைய குறித்த யுவதி சென்றுள்ளார்.

சுகயீனமுற்ற யுவதி

இதன்போது, அந்த உணவகத்திலிருந்து குளிர்பானம் ஒன்றை வாங்கி அருந்திக்கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென சுகயீனமுற்றுள்ளார்.

இதனையடுத்து, சுகயீனமுற்ற யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் குளிர்பானம் அருந்திய யுவதிக்கு நேர்ந்த கதி! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி | Soft Drink Had Woman Was Admitted Hospital Colombo

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த யுவதி குளிர்பானத்துக்கு பதிலாக தரையைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திரவம் ஒன்றை அருந்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, யுவதியின் உறவினர்கள் சிலர் இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். 

காவல்துறை விசாரணை

இந்நிலையில், காவல்துறையினரின் விசாரணையில், குறித்த உணவகத்தில் உள்ள பணியாளர் ஒருவர் குளிர்பானத்துக்கு மாறாகத் தவறுதலாகத் தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவத்தை யுவதிக்கு கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. 

கொழும்பில் குளிர்பானம் அருந்திய யுவதிக்கு நேர்ந்த கதி! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி | Soft Drink Had Woman Was Admitted Hospital Colombo

அத்துடன், குறித்த உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவங்கள் அடங்கிய போத்தல்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு டாம் வீதி காவல்துறையினர் மற்றும் கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்