முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மேற்காசிய கனிஷ்ட சதுரங்க சம்பியன்ஷிப் போட்டிகள்: பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்கள்!

மேற்காசிய கனிஷ்டசதுரங்க சம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் மற்றும் பெண்களுக்கான தங்கப் பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது.

குறித்த போட்டியானது, ஆசிய மற்றும் இலங்கை சதுரங்க சம்மேளனங்களின் ஏற்பாட்டில் ஜூலை 16 முதல் 21 வரை வஸ்கடுவ சிட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.

அந்தவகையில், இலங்கை (Sri Lanka) , இந்தியா (India) , கஜகஸ்தான் (Kazakhstan) மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 வயதுக்குட்பட்ட சதுரங்க வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆடவருக்கான போட்டி

அதன்படி, 12 பேர் கலந்துகொண்ட ஆடவருக்கான  போட்டியில் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த சுசல், சர்வதேச தரவரிசைப்படி போட்டி பட்டியலில் முதலிடத்தில் இருந்த பங்களாதேஷ் சதுரங்க வீரர்களை ஐந்து சுற்றுகளில் தோற்கடித்து, அதே போட்டியில் கிர்கிஸ்தானின் இரண்டாம் நிலை வீரரிடம் தோல்வியடைந்துள்ளார்.

மேற்காசிய கனிஷ்ட சதுரங்க சம்பியன்ஷிப் போட்டிகள்: பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்கள்! | Sri Lanka Wins Gold At Junior Chess Champs

இந்தநிலையில், கிர்கிஸ்தானின் மூன்றாம் நிலை வீரருடனான போட்டி சமநிலையில் முடிய அவர் போட்டியில் மற்ற ஆறு வீரர்களையும் தோற்கடித்ததன் மூலம் ஒன்பது சுற்றுகளில் 7 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

சதுரங்க போட்டிகள்

குறிப்பாக, இலங்கையில் மேற்காசிய கனிஸ்ட பிரிவினருக்கான சதுரங்க போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

மேற்காசிய கனிஷ்ட சதுரங்க சம்பியன்ஷிப் போட்டிகள்: பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்கள்! | Sri Lanka Wins Gold At Junior Chess Champs

அதனடிப்படையில், இந்தப் போட்டியின் ஆடவர் பிரிவின் சம்பியனான கொழும்பு நாலந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த லோகுவின் சுசல் டி சில்வா மூன்றாவது முறையாக தேசிய சதுரங்கப் பட்டத்தை வென்றதுடன், சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற இலங்கையின் இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மேலும், கொழும்பு விட்சர்லி சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஓஷினி தேவிந்தியா குணவர்தன தேசிய சதுரங்க பட்டத்தை வென்ற இலங்கையின் இளைய தேசிய சதுரங்க சம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்