முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை உணவுகள்! ஒவ்வொரு உணவிலும் ஒரு பாரம்பரியம்- மாறுபட்ட மக்களால் உருவான மாறாத சுவை

உணவு என்பது ஒரு நாட்டின் கலாசாரத்தையும், வரலாற்றையும் பிரதிபலிக்கும் பிரதான அம்சமாகும்.

இலங்கை ஒரு சிறிய தீவு நாடாக இருந்தாலும், அதன் உணவுகள் உலகளவில் பெரும் புகழைப் பெற்றுள்ளன என்றே கூற வேண்டும்.

இந்த நாட்டின் பண்பாட்டுப் பல்வகைமையும், வரலாற்றுப் பின்னணியும் அதன் உணவுகளில் பிரதிபலிக்கின்றன.

srilanka famous foods

தமிழ், சிங்கள, முஸ்லிம், மலாய், பறங்கியர் உள்ளிட்ட பல இனங்களின் கலவையால் உருவான இந்த சமையல் மரபுகள், ருசி, வாசனை, வண்ணம் மற்றும் வகைகளில் மிகுந்த சிறப்புகளை கொண்டுள்ளன.

மேலும்,
ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தனது தனிச்சுவையும் அடையாளமும் உள்ள உணவுகள் இருப்பது இந்த நாட்டின் உணவு கலாசாரத்தையே மேலும் வலுப்படுத்துகிறது.

இலங்கை உணவை பொறுத்தவரையில் இந்த உணவுகள் மற்றைய உணவிலிருந்து வேறுபடுவதற்கு பல முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன.

மசாலா பயன்படுத்தும் விதம்

இலங்கை சமையலில் மிளகு, மிளகாய், மஞ்சள், கார மசாலா, கருவேப்பிலை, மல்லி, சீரகம் போன்ற மசாலாக்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கை உணவுகள்! ஒவ்வொரு உணவிலும் ஒரு பாரம்பரியம்- மாறுபட்ட மக்களால் உருவான மாறாத சுவை | Sri Lankan Food In Tamil

ஆனால், அவை சமச்சீராக கலக்கப்படுவதால், உணவு மிகவும் மணமுமிக்கவாகவும் சுவைமிக்கதாக காணப்படுகின்றது.

தேங்காயின் முக்கிய பங்கு

இலங்கையின் பெரும்பாலான உணவுகளில் தேங்காய் பால், தேங்காய் திரட்டு, தேங்காய் எண்ணெய் முக்கிய பங்காற்றுகின்றன.

இது உணவுக்கு இனிமையான மணத்தையும் சுவையையும் அளிக்கிறது.

மீன் மற்றும் கடலுணவுகள்

தீவுக்க நாடான இலங்கையில், மீன் மற்றும் கடலுணவுகள் முக்கிய இடம் பெறுகின்றன.

மீன் கறி, நண்டு மசாலா, இறால் கறி ஆகியவை மக்கள் மனதில் நிறைந்திருக்கும் பிரபலமான உணவுகளாகும்.

சம்பல்

தேங்காய் சம்பல்,சினி சம்பல் போன்றவை இலங்கை உணவுகளுடன் அவசியமாக சேர்க்கப்படும் சிறப்பு உணவுகளாகும்.

இலங்கை உணவுகள்! ஒவ்வொரு உணவிலும் ஒரு பாரம்பரியம்- மாறுபட்ட மக்களால் உருவான மாறாத சுவை | Sri Lankan Food In Tamil

இடியாப்பம், அப்பம்,பிட்டு, சோறு போன்ற உணவுகளுடன் இவை சுவையை பல மடங்கு உயர்த்துகின்றன.

அதிலும் இலங்கையில் கிராமபுற உணவுகளில் துவையல் என்ற உணவு அதிகமாக காணப்படும்.

பிரபலமான இலங்கை உணவுகள்

அப்பம்

தோசைக்கு ஒத்த அமைப்பில், ஆனால் குழம்பு அல்லது முட்டை சேர்க்கப்பட்டு சுருளாக இருக்கும் இந்த உணவு காலை உணவாக பெரிதும் பிரபலமாக உள்ளது.

இலங்கை உணவுகள்! ஒவ்வொரு உணவிலும் ஒரு பாரம்பரியம்- மாறுபட்ட மக்களால் உருவான மாறாத சுவை | Sri Lankan Food In Tamil

இடியப்பம்

நறுக்கிய அரிசி மாவால் தயாரிக்கப்பட்ட இத்தகைய உணவு, பருப்பு, கறி மற்றும் சம்போல் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடப்படும்.

கொத்து ரொட்டி

வெட்டிய பரோட்டா துண்டுகளுடன் காய்கறி, முட்டை அல்லது இறைச்சி சேர்த்து உருட்டப்பட்டு வித்தியாசமான சத்தத்துடன் செய்யப்படும் இந்த உணவை மக்கள் அதிகமாக விரும்பி உண்பார்கள்.

இலங்கை உணவுகள்! ஒவ்வொரு உணவிலும் ஒரு பாரம்பரியம்- மாறுபட்ட மக்களால் உருவான மாறாத சுவை | Sri Lankan Food In Tamil

தொதல்

தேங்காய் பால், சீனி மற்றும் அரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படும் இந்த இனிப்பு, இலங்கையின் பாரம்பரிய இனிப்பாக பார்க்கப்படுகின்றது.

இதேபோன்று சில உணவுகள் வெளிநாட்டு கலாசாரத்துடன் கலந்து உருவானவையாகவும் உள்ளது.

இலங்கை உணவுகள்! ஒவ்வொரு உணவிலும் ஒரு பாரம்பரியம்- மாறுபட்ட மக்களால் உருவான மாறாத சுவை | Sri Lankan Food In Tamil

உதாரணமாக: லேம்ப்-ரய்ஸ் (Lamprais) – Dutch-Burgher கலாசாரம்

சரடபத் பானம் (Saruwath) – அரபு கலாசாரம்

பர்கர் ஸ்நாக்ஸ், பேஸ்ட்ரி, பாஸ்தா போன்றவை ஆங்கில பாரம்பரியத்தை காட்டுகின்றன.

இலங்கை உணவுப் பாரம்பரியம்

தமிழர்களும் இலங்கை உணவுப் பாரம்பரியமும்
இலங்கையில் வாழும் தமிழர்கள், குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களில், தங்கள் சொந்தமான சமையல் முறைகளை வளர்த்துள்ளனர்.

பருப்பு குழம்பு, சிறிய வற்றல் குழம்பு,பண்ணை இடியப்பம் ,பிட்டு போன்றவை பிரபலமான உள்ளூர் உணவுகளாகும்.

அத்துடன், இலங்கை மலாய் மற்றும் முஸ்லிம்
சமுதாயங்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

srilanka puttu

பிரியானி, சர்வத், மீன் பக்கோடா, சட்னி ஆகியவை இந்த கலாசார இணைவுகளை எடுத்துக்காட்டுகின்றன.

மலையக உணவுகளை பொறுத்தவரை, பலாக்காய் கறி, சேமன் கீரை, பொலஸ் கறி, மரவள்ளி கிழக்கு போன்றவை பிரசித்தமானவை.

உலகளாவிய முன்னேற்றம்

இன்றைக்கு லண்டன், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இலங்கை உணவகங்கள் பெரிதும் விருத்தி பெற்றுள்ளன.

இலங்கை உணவுகள்! ஒவ்வொரு உணவிலும் ஒரு பாரம்பரியம்- மாறுபட்ட மக்களால் உருவான மாறாத சுவை | Sri Lankan Food In Tamil

இலங்கை அப்பம், சினி சம்பல், கறி வகைகள் அனைத்தும் உலக ருசிகர பட்டியலில் இடம்பெறுகின்றன.

இலங்கை உணவுகள் என்பது சும்மா சாப்பிட வேண்டிய உணவல்ல – அது ஒரு கலாசார அனுபவமிக்கது.

 வரலாற்றுப் பயணம்

இலங்கை உணவுகள், அதன் மண், மக்கள், மதம், வரலாறு மற்றும் சமூகவிலக்குகளின் தத்துவத்தை பிரதிபலிக்கின்றன.

ஒரு உணவு சாதாரணமாக இருக்காது — அது ஒரு வரலாற்றுப் பயணமும், சுவைக் கலைவையாகவும் இருக்கிறது.

இலங்கை உணவுகள்! ஒவ்வொரு உணவிலும் ஒரு பாரம்பரியம்- மாறுபட்ட மக்களால் உருவான மாறாத சுவை | Sri Lankan Food In Tamil

ஒவ்வொரு உணவிலும் வரலாறும், வாழ்க்கை முறையும், நிலத்தோடும், நெஞ்சோடும் பின்னியிருக்கின்றன.

தமிழ் சமுதாயமும் இந்த உணவுப் பாரம்பரியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பெருமையுடன் உணரவேண்டும்.

தமிழிலும் சிங்களவர்களிலும், முஸ்லிம்களிலும், பறங்கியர்களிலும், மலாயர்களிலும் கலந்துவந்த இந்த நாட்டு உணவுகள், ஒவ்வொரு கலவையிலும் கதைகளைக் கூறுகின்றது என்றால் மிகையாது. 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Shadhu Shanker அவரால் எழுதப்பட்டு,
26 May, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

<!–

இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,

–>

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.