புதிய இணைப்பு
ரி20 உலகக் கிண்ணத்தோடு நாடு திரும்பிய இந்திய அணி பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi) சந்தித்துள்ளனர்.
டெல்லி (Delhi) லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்திய கிரிக்கெட் அணியினர் பிரதமரை சந்தித்து பாராட்டு பெற்றதுடன் காலை உணவையும் பகிர்ந்துக்கொண்டனர்.
உலக கிண்ணத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு மும்பை வான்கடே அரங்கில் இன்று (4.7.2024) மாலை பாராட்டு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஐசிசி டி20 (ICC T20 world cup) உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய (indian team) அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
பார்படோஸில் (Barbados) இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று (4.7.2024) அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வெற்றி பெற்றிருந்தது.
இரசிகர்கள் உற்சாக வரவேற்ப்பு
இந்நிலையில், நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க இரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்தாக அந்நாட்டுஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#WATCH | Coach Rahul Dravid, Yuzvendra Chahal and Jasprit Bumrah along with Team India arrive at Delhi airport, after winning the #T20WorldCup2024 trophy. pic.twitter.com/wYCx91SkpP
— ANI (@ANI) July 4, 2024
இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் இன்று காலை பிரதமர் மோடியை (Prime Minister Modi) சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மும்பையில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி வாகனத்தில் உலககிண்ணத்துடன் நகர் வலம் வரவுள்ளனர்.
அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘பெரில்’ புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/FbYSZQwVuGw