அம்பாறையில் (Ampara) பலநாட்களாக மரமொன்றில் தொங்கிய நிலையில் ஆணின் சடலமொன்று மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று (05) பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொர்பில் மேலும் தெரியவருகையில், அக்கரைப்பற்று
காவல் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உருக்குலைந்த நிலையில் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு தகவல்
இதையடுத்து, பொதுமக்கள் மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட சடலம் சுமார் 35 முதல் 38 வயதுடையவரது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கடும் நீல நிற ரீசேட் அணிந்து காணப்படுவதுடன் ஐந்து அடி உயரம் கொண்டவராக குறித்த நபர் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான முடிவெடுத்து ஏற்பட்ட இழப்பா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை
அக்கரைப்பற்று காவல்துறையினலர் முன்னெடுத்து வருகின்றனர்.
இது தவிர வேறு எந்தவொரு காவல்நிலையத்திலும்
காணாமல் போனவர்கள் தொடர்பில் எதாவது முறைப்பாடு உள்ளதா என்பதை
கண்டறிய உரிய தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.