நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இன்று காலை பிரதமர் ஹரிணி ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம்..
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், பவானந்தராஜா ஆகியோர் கலந்கொண்டிருந்தனர்.