முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.
இருந்தாலும் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல் மற்றும் வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
இந்தநிலையில், நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாதாம் எண்ணெய்- 4 ஸ்பூன்
ஆர்கான் எண்ணெய்- 4 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் பாதம் எண்ணெயை எடுத்து அதனுடன் ஆர்கான் எண்ணெய் சேர்க்கவும்.
இந்த கலவையை முடியில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
மேலும், இந்த எண்ணெயை வாரத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.