வாக்குவாதத்தைத் தொடர்ந்து கூரிய ஆயுதத்தால் ஒருவரைக் குத்திக் கொன்றதற்காக 43 வயது முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள்
2010 மார்ச் 02 அன்று களனியில் ராய் பீரிஸ் என்ற நபரை ஆயுதத்தால் குத்திக் கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கே குறித்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பை வழங்கிய கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பவர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இந்த தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

