முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசுக் கட்சி பெண் தலைமைத்துவம் இருட்டடிப்பு…! சுமந்திரனுக்கு பதிலடி

தமிழரசுக் கட்சியின் (ITAK) ஊடகப் பேச்சாளர் எனக் கூறுபவர் கட்சியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பெண்களை தேடினோம் என்ற கருத்தை மறுக்கின்றேன் என அக்கட்சியின் முன்னாள் கொழும்புக் கிளை (colombo) செயலாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் என தன்னைத்தான் கூறிக் கொள்ளும் ஒருவரின் கருத்துக்களுக்கு இணங்காத காரணத்தினால், அவரது சுயநல அரசியலுக்காக பெண்களை பொது தேர்தலில் போட்டியிட விடாமல் தடுத்தனர்.

தமிழரசுக் கட்சி

அண்மையில், தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எனக் கூறுபவர் தமிழரசுக் கட்சியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பெண்களை தேடினோம் பலரும் பின்வாங்குகிறார்கள் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டார்.

அவரது கருத்தை நான் முற்றாக மறுக்கிறேன்.

தமிழரசுக் கட்சி பெண் தலைமைத்துவம் இருட்டடிப்பு...! சுமந்திரனுக்கு பதிலடி | Tna Accused Of Sidelining Female Candidates

தமிழரசுக் கட்சியில் ஆளுமை மிக்க பெண்கள் இருக்கும்போது எங்கோ எல்லாம் தேடி இரு பெண்களைப் பிடித்து வந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இறக்கி உள்ளனர்.

தமிழரசுக் கட்சியில் இருக்கும் பெண்கள் ஊடகப் பேச்சாளருக்கு சலாம் போடும் பெண்களாகவோ அல்லது தலையாட்டும் பெண்களாகவோ இருக்காத காரணத்தினால் எம்மை தேர்தலில் நிறுத்தவில்லை.

பொதுத்தேர்தல்

நான் முப்பது வருடங்களுக்கு மேலாக தனியார் காப்புறுத்துறையில் பல பதவி நிலைகளை வசித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையில் பத்து வருடங்களுக்கு மேலாக பல்வேறு பதவி நிலைகளை வகித்தவள்.

தமிழரசுக் கட்சி பெண் தலைமைத்துவம் இருட்டடிப்பு...! சுமந்திரனுக்கு பதிலடி | Tna Accused Of Sidelining Female Candidates

தமிழரசுக் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாத நிலையில் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி விக்னேஸ்வரனே தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் கூட்டணியில் மான் சின்னத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்றார்.

மேலதிக செய்திகள் :- கஜிந்தன்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.