உக்ரைனில்(ukraine) நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்(vladimir putin) ஒரு சந்திப்பை எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்(donald trump) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,
“நான் செய்ய விரும்பும் விஷயங்களில் ஒன்று, ஜனாதிபதி புடின் விரைவில் என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். இதற்காக நாம் காத்திருக்க வேண்டும்.
இந்த போரை நாம் முடிக்க வேண்டும்
இந்த போரை நாம் முடிக்க வேண்டும். இந்த போர் பயங்கரமானது. ”
உக்ரைனில் நடந்த போரில் “மில்லியன் கணக்கான வீரர்கள்” இறந்ததாகவும் டிரம்ப் கூறினார்.
மூன்றாம் உலகப் போரை தடுப்பேன்
“நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்தப் போர் நடந்திருக்காது” என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
“நான் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன். மத்திய கிழக்கில் குழப்பத்தை நிறுத்துவேன். மூன்றாம் உலகப் போரை நான் தடுப்பேன், நான் உறுதியளிக்கிறேன், நாங்கள் மூன்றாம் உலகப் போருக்கு மிக அருகில் இருக்கிறோம்.”என குறிப்பிட்டார்.
டிசம்பர் 19 அன்று, ரஷ்ய ஜனாதிபதிர் விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை “எந்த நேரத்திலும்” சந்திக்கவோ அல்லது பேசவோ தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.