விஜய் மகன் சஞ்சய்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் ஏராளம். ஆனால், அவர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவித்தார்.
இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், சோகத்தையும் கொடுத்தது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்கப் போவதாக பல மாதங்களுக்கு முன்னதாக போட்டோ உடன் அறிவிப்பு வெளியானது.
விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தின் புதிய அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் என்ன தெரியுமா
வெளியான புது அப்டேட்
இந்த நிலையில்,ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராயன் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமான நடிகர் சந்தீப் கிசன் தான் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ என தகவல் வெளியாகியுள்ளது.
ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இருக்கப்போவதாகவும் மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவர உள்ளது எனவும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.