முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவுக்கு செல்ல காத்திருந்த இளைஞனின் மரணத்திற்கு நீதிகோரி போராட்டம்

மல்லாவி – வவுனிக்குளம் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (16) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 29ஆம் திகதியன்று கனடாவுக்கு செல்ல தயாரான நிலையில் காணாமல் போன மல்லாவி – யோகபுரம் பகுதியினை சேர்ந்த ஆனந்தராசன் சஜீவன் என்ற இளைஞன் மல்லாவி – வவுனிக்குளம் பகுதியிலிருந்து மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார். 

இந்நிலையில், குறித்த இளைஞனின்
மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து கவனயீர்ப்பு போராட்டம்
ஒன்றினை இன்று முன்னெடுத்துள்ளன. 

பொதுமக்களின் கோரிக்கை 

19 நாட்களாகியும் குறித்த இளைஞனின் படுகொலைக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை
கைது செய்யப்படவில்லை என்பதுடன், பொலிஸாரின் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக
கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன்
நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் கோரியுள்ளன.

மல்லாவி மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய பேரணி மல்லாவி பொலிஸ் நிலையம்
வரை சென்று பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “சசீவன் மரணத்திற்கு நீதி வேண்டும்”

“கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்து”

“விசாரணைகளை துரிதப்படுத்தி நீதியை பெற்று தா” போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு கோசமிட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக மல்லாவி பகுதிகளில்
வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்ததுடன் போராட்டக்காரர்கள் மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பு
ஒன்று கூடி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மனு கையளிப்பு 

இதன்போது, அங்கு வருகை தந்த மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இளைஞனின் படுகொலைக்கான
நீதியினை தான் பெற்று தருவதாகவும் தெரிவித்திருந்தார். 

கனடாவுக்கு செல்ல காத்திருந்த இளைஞனின் மரணத்திற்கு நீதிகோரி போராட்டம் | Young Man Death Issue In Vavunikulam Protest

அதேவேளை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விசாரணைகளை முன்னெடுத்து
குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தாவிடின் பாரியளவிலான போராட்டம் ஒன்றினை
தாம் மேற்கொள்வோம் என்றும், சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு
போராட்டத்தினையும் தாம் முன்னெடுப்போம் என்றும் மக்கள் எச்சரித்துள்ளனர். 

அத்துடன், பொலிஸ்
பொறுப்பதிகாரியிடமும், வருகை தந்திருந்த நாடாளுமன்ற அரசியல் பிரமுகர்களிடமும் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான
செல்வராசா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா
ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.