இலங்கையில் (Srilanka) இந்த ஆண்டில் இதுவரை 100,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு 340,000 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப எதிர்பார்க்கிறோம் என்று பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 100,413 பதிவுசெய்யப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது.
அவர்களில், சுய பதிவு மூலம் வெளியேறியவர்கள் 64,150 பேர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் பதிவு செய்தவர்கள் 36,263 பேர்.
இந்தக் குழுவில் 39,496 பெண்களும் 60,917 ஆண்களும் அடங்குவர்.
குவைத்தில் வேலைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் செய்யப்பட்டன. அதன்படி 25,672 பேர் வெளியேறிவிட்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை
இந்த காலகட்டத்தில் மொத்தம் 18,474 பதிவு செய்யப்பட்ட நபர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைகளுக்காகவும், 14,162 பேர் கத்தாருக்கும், 12,625 பேர் சவுதி அரேபியாவிற்கும் சென்றுள்ளனர்.
இந்த நபர்கள் மற்ற நாடுகளுக்கும் பதிவு செய்து ஏற்கனவே புறப்பட்டுவிட்டதாக SLBFE தெரிவித்துள்ளது.