முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள்

யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

உலகளவில் இந்து மக்களால் மகா சிவராத்திரி விரதம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. 

சைவ சம்பிரதாயத்தின் அஷ்ட விரதங்களுள் பிரதானமான இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதி கூடும் இரவில் கொண்டாடப்படும்.

அந்தவகையில், இன்றைய தினம், இலங்கையில் உள்ள பல சிவாலயங்களில் மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. 

பூஜை வழிபாடுகள்

மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற
தலங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் விநாயகர்
வழிபாட்டுடன் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

குறித்த பூஜை
வழிபாடுகளில் இன்றைய தினம்15.02.2026 சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும்
அடியவர்கள் தமது கரங்களால் சிவனுக்கு பூவும் நீர் ஊற்றி நிவர்த்தியை நிறைவு
செய்தனர்.

தொடர்ச்சியாக ஆறு சாம காலபூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

மன்னார்

மன்னாரில் புகழ் பெற்ற தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி
நிகழ்வானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) சிறப்பாக இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள் | Maha Shivaratri Keerimalai Nakuleswarar Jaffna

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான
மக்கள் வருகை தந்ததோடு வெளிநாடுகளில் இருந்தும் விசேடமாக பக்தர்கள் வருகை
தந்திருந்தனர்.

மலையக ஆலயங்களில் பல்வேறு நிகழ்வுகள்

இந்துக்களின் ஆன்மிக வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெறும் புனித திருநாள்களில்
ஒன்றான மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல இந்து ஆலயங்களில்
பக்தி பூர்வமான சிறப்பு நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றன.

சிவபெருமானின் அருளை நாடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும்
விழித்திருந்து விரதம் இருந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். 

மகா சிவராத்திரியினை முன்னிட்டு மலையக ஆலயங்களில் பல்வேறு நிகழ்வுகள்
இடம்பெற்றன.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள் | Maha Shivaratri Keerimalai Nakuleswarar Jaffna

GalleryGallery

Source: https://tamilwin.com/article/maha-shivaratri-keerimalai-nakuleswarar-jaffna-1771173414

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.