முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனியார் வாகன இறக்குமதி தடை குறித்து வெளியான தகவல்

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதை அடுத்த வருட ஆரம்பம் வரை தாமதப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், நாட்டின் பொருளாதாரம் இன்னும் ஸ்திரமாக இல்லையெனவும் மற்றும் அதற்கு வசதியாக மத்திய வங்கியிடம் போதிய வெளிநாட்டு கையிருப்பு இல்லை என்பதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை தடையை நீக்குவதை தாமதப்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தனியார் வாகனங்களின் இறக்குமதி ஆரம்பமானதன் மூலம் வருடாந்தம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிலிருந்து வெளியேறும் என அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

வர்த்தக வாகனங்கள்

எவ்வாறாயினும் வர்த்தக வாகனங்களான லொறிகள், பேருந்துகள் மற்றும் ட்ரக்குகள் மற்றும் சுற்றுலாத் துறைக்கு பயன்படுத்தப்படும் வான்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை அடுத்த மாதம் முதல் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வாகன இறக்குமதி தடை குறித்து வெளியான தகவல் | Ban On Sri Lankan Private Vehicle Imports Delayed

இருப்பினும், தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடை நீக்கப்பட்டதன் பின்னர் அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வது அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியிலிருந்து மின்சார வாகனங்கள் மற்றும் தனியார் கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க அரசு திட்டமிட்டிருந்தது ஆனால் இதையும் அடுத்த ஆண்டு வரை தாமதப்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் முன்னுரிமை

இறக்குமதி செய்யப்படும் தனிநபர் வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பங்கு விகிப்பதுடன் இதன் காரணமாக தனியார் வாகனங்கள் இறக்குமதியை அகற்றுவது அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் வரை தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

வாகனங்களின் இறக்குமதி அடுத்த ஆண்டு தொடங்கிய பின்னர் நாட்டில் வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வாகனங்களை அசெம்பிள் செய்யும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்றும் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

தனியார் வாகன இறக்குமதி தடை குறித்து வெளியான தகவல் | Ban On Sri Lankan Private Vehicle Imports Delayed

அத்தோடு, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படாத வைத்தியர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளின் வாகன அனுமதிப்பத்திரத்துக்கு அடுத்த வருடம் அனுமதி வழங்க தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒப்புதல் வரிசையில் உள்ள 10,000 இறக்குமதி அனுமதிகள் ஒரே நேரத்தில் அங்கீகரிக்கப்படாது என்றும் மற்றும் மற்ற வாகனங்களும் கட்டுப்பாட்டுடன் இறக்குமதி செய்யப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.