யாழ்ப்பாணம்- அக்கரை கடற்பரப்பில் இளைஞன் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது நேற்றையதினம்(7) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இந்தநிலையில் , சடலம்
உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

