டிராகன்
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி இன்று முக்கிய நடிகராக மாறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டிராகன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் மிஸ்கின், கவுதம் மேனன், விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
டிராகன் பட நடிகை அடுத்து யாருடன் நடிக்கிறார் தெரியுமா? அட இவரா
நகைச்சுவை கலந்த காதல் கதையாக மட்டுமல்லாமல், யதார்த்தமான வாழ்க்கை குறித்தும் இப்படத்தில் பேசப்பட்டது. இதுவே இப்படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.
வசூல் விவரம்
இந்த நிலையில் 6 நாட்களை வெற்றிகரமாக இப்படம் கடந்துள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியள்ளது.
அதன்படி, டிராகன் திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் கண்டிப்பாக ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.