விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக முன்னாள் ஜனாதிபதிகள் நாளை கொழும்பில் சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
கொழும்பு மலர் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இன்று இது தொடர்பாக சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
திரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்
அதில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜெயசேகர, தலதா அதுகோரல, ருவான் விஜேவர்தன, மனோ கணேசன், பி. திகாம்பரம், ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன, சகல ரத்நாயக்க சுகீஸ்வர பண்டார மற்றும் பல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரும் இதனை ஆதரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய – சந்திரிகா
நாளை நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்றாலும், முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டில் இருப்பதாகவும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
https://www.youtube.com/embed/g8lsqUdzoX4