நல்லூர் ஆலய வெளி வீதியில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடை தொடர்பில் யாழ். மாநகர
சபையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர சபையின் முதல்வர் மதிவதனி
விவேகானந்தராசா தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த கூட்டத்தின் போது யாழ். மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மாநகர சபையின் முதல்வருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

