முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாகன இறக்குமதிக்கு அனுமதி : ஜனாதிபதி மகிழ்ச்சி தகவல்

எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்

மீண்டும் டொலர் நெருக்கடி

“வாகன இறக்குமதியால் மீண்டும் டொலர் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம், மத்திய வங்கியுடன் நீண்ட நாட்களாக விவாதித்து, வெளியேறும் டொலர்களை புரிந்து கொண்டு இதைச் செய்கிறோம். அதனால்தான் நாங்கள் உழைத்தோம். வாகனச் சந்தையை கடுமையான ஸ்திரத்தன்மையுடன் திறக்க வேண்டும்” என்று ஜனாதிபதி கூறினார்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி : ஜனாதிபதி மகிழ்ச்சி தகவல் | Vehicle Import Allowed From February

இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள்

இதனிடையே இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர், சுற்றுலா வகை வாகனங்களுக்கான டொயோட்டா லங்கா வாகனங்களின் முதல் தொகுதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கு அனுமதி : ஜனாதிபதி மகிழ்ச்சி தகவல் | Vehicle Import Allowed From February

அதன்படி, நான்கு மாத காலப்பகுதிக்குள் பேருந்துகள் மற்றும் வான்கள் இலங்கைக்கு வெற்றிகரமாக இறக்குமதி செய்யப்பட்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் மேலும் பல வாகனங்களை இறக்குமதி செய்ய நம்புவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.

வாகனங்களின் விலைகள்

இதேவேளை, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னர் டொயோட்டா லங்கா நிறுவனம் புத்தம் புதிய டொயோட்டா வான் ஒன்றை 150 இலட்சத்திற்கும், புத்தம் புதிய டொயோட்டா பேருந்து ஒன்றை 170 இலட்சத்திற்கும் விற்பனை செய்வதாக விளம்பரங்களில் குறிப்பிட்டிருந்தது.

வாகன இறக்குமதிக்கு அனுமதி : ஜனாதிபதி மகிழ்ச்சி தகவல் | Vehicle Import Allowed From February

இந்த வகையைச் சேர்ந்த பத்து வருடங்கள் பழமையான வான்கள் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதன் பின்னணியில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கைக்கான வாகன இறக்குமதி சுமார் நான்கு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் இந்நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் அசாதாரணமாக உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.