அரபிக்கடலில் மூழ்கிய எண்ணெய் தாங்கி கப்பலின் பணியாளர்களைத் தேடும் நடவடிக்கைகளின் போது 09 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மீட்கப்பட்டவர்களில் 08 இந்தியர்களும் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எஞ்சிய 7 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
இலங்கையர்கள்
குறித்த கப்பலின் பணியாளர்களில் 16 பேர் இருந்ததாகவும் அதில் 13 பேர் இந்தியர்கள் எனவும் ஏனைய மூவர் இலங்கையர்கள் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தது.
ஓமானின் துறைமுக நகரமான டுக்மில் இருந்து தென்மேற்கே 25 கடல் மைல் தொலைவில் அரபிக்கடலில் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று மூழ்கியது.
அதன் போது, கப்பலில் இருந்த 16 பேர் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது 07 பேர் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.