தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருக்கும் போது
அப்போதைய ஆளுங்கட்சிக்கு பல எதிர்ப்புக்களை விட்டிருந்தனர். ஆனால் ஜனாதிபதி
அநுர குமார திசாநாயக்க பல வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் தேர்தல் காலங்களில்
வழங்கி யிருந்த போதிலும் அது முற்று முழுதாக நிறைவேற்றப்படவில்லை என்கின்ற
குற்றச் சாட்டுக்களை மக்கள் முன்வைத்துள்ளனர்.
எதிர்வரும் (2025.05.06) ஆந் திகதி அன்று உள்ளூர் அதிகார சபை தேர்தல் ஒன்று இடம்
பெறவுள்ள நிலையில் நாட்டின் வடகிழக்கு உட்பட பல பிரதேசங்களிலும் தேசிய மக்கள்
சக்திக்கு ஆதரவு தெரிவித்து பல பரப்புரை கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றி
வருகின்றார்.
மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் வாக்குகளை தன்வசப்படுத்தவும் பல
கதைகளை கூறுகின்றார். இருந்த போதிலும் இந்த நிலை தொடர்பில் மக்கள் அதிருப்தி
அடைந்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சூத்திரதாரிகளை
வெளிப்படுத்துவேன் , பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான இளைஞன் முஹம்மது
ருஸ்டி தொடர்பிலும் அவரது விடுதலை தொடர்பிலும் கைது செய்யப்பட்ட நோக்கம்
தொடர்பிலும் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் கூறியிருந்தார்.இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள், பொது மக்கள் என பலரும் பல கருத்துக்களை
வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் தெரிவிக்கையில்
” ஜனாதிபதி கூறியதை போன்று மக்களின் எதிர்பார்ப்பான ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான
உண்மைகளை ஓரிரு தினங்களுக்குள் வெளிப்படுத்த வேண்டும் என மக்களின்
எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
தேர்தல் காலத்தில் அரசாங்கம் சொன்னதை போன்று
செயற்பட வேண்டும் .உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் அநியாயமாக
கைதானவர்கள் விடுவிக்கப்பட்டு சரியான விமோசனம் கிடைக்க வேண்டும்
நல்ல பல விடயங்களை ஆட்சியாளர்கள் செய்கின்ற போது மக்களின் வரவேற்பு அதிகமாக
காணப்படும்.
ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரனை மூலமாக
குற்றவாளிகளாக இருப்பின் தண்டிப்பது வரவேற்க தக்கது ஆனாலும் முக்கிய பல
கைதுகள் பேசு பொருளாக மாறியுள்ளது . தேர்தல் காலத்துக்கான ஒரு நாடகமாக கூட இது
இருக்கலாம் அல்லது மக்களை திருப்திப்படுத்துவதற்கான கைதா அல்லது அரசியல்
ரீதியான அஜந்தாக்களாக கூட இருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது.
பிள்ளையான் கைது
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். இது கிழக்கில் மாத்திரமல்ல வடகிழக்கு உட்பட தேசிய சர்வதேச ரீதியாக பேசுபொருளாக
மாறியுள்ளது.
இது குறித்து எதிர்க் கட்சி தலைவர் அக்கரைபற்றில் இடம் பெற்ற ஐக்கிய மக்கள்
சக்தி வேட்பாளர்களை ஆதரித்து (15.04.2025) இடம் பெற்ற தேர்தல் பரப்புரை
கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

“இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி நாட்டு மக்களுக்கு
சேவையாற்றுவதற்காகவே ஜனாதிபதி நியமிக்கப்படுகின்றார்.அவ்வாறு இல்லாது
ஜேவிபிக்கு மாத்திரம் சேவையாற்றுவதற்காக நியமிக்கப்படவில்லை. ஜனாதிபதியானவர்
கட்சி, சாதி, இனம், மதம் பாராமல் அனைவருக்கும் சமமான சேவையை வழங்க வேண்டும்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் அச்சுறுத்தல்களை கண்டு சளைக்க வேண்டாம்
சமீபத்தில், நமது நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பலஸ்தீன மக்கள் குறித்து
அவர் கருதிய கருத்தை சுவரொட்டி ஒட்டி வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த இளைஞர் பலஸ்தீன மக்கள் சார்பாக தனது கருத்துக்களை முன்வைத்த போது ஜனாதிபதி அநுர குமார
திஸாநாயக்க பயங்கரவாத தடைச் சட்டத்தினை பிரயோகித்து கைது செய்தார்.முன்னாள் ஜனாதிபதி
ரணசிங்க பிரேமதாச கூட பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக முன்நின்றார். ஆதரவான
நிலைப்பாடுகளை எடுத்தார்.
பலஸ்தீன மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதம்
முன்னெடுக்கப்பட்ட சமயங்களில், பாரிய படுகொலைகள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில்,
அப்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அநுர குமார திஸாநாயக்க
குரல் எழுப்பினார். இன்று பலஸ்தீன மக்கள் சார்பாக நமது நாட்டைச் சேர்ந்த
இளைஞன் ஒருவர் குரல் எழுப்பிய சமயத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார
திஸாநாயக்க, அவருக்கு எதிரான தடுப்புக் காவலில் வைக்கும் பத்திரத்தில்
கையொப்பமிடும் அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர்
தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
ஐக்கிய மக்கள் சக்தியிடம் இரட்டைக் கொள்கைகளும் இரட்டை நாடகங்களும் இல்லை.
ஐக்கிய மக்கள் சக்தி பலஸ்தீன மக்களுக்காக நின்றது. இஸ்ரேலிய அரசும் பலஸ்தீன
அரசும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும்
தெரிவித்தார்.
ஜே.வி.பி அரசாங்கத்திற்கு பொய் சொல்லவும் ஏமாற்றவும் மட்டுமே தெரியும். அன்று
தேர்தல் மேடையில் சொன்னதை இன்று செய்ய முடியாது புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இன்று மக்களுக்கு வறுமையும், அசௌகரியமும் அதிகரித்துள்ளன. இவ்வாறான நிலையில்
வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். இதற்கான வலுவான
முறையான வேலைத்திட்டமொன்று அவசியம் முன்னெடுக்க வேண்டும் என சஜித் தெரிவித்தார்.
இவ்வாறான நிலை குறித்து திருகோணமலையை சேர்ந்த பெண் சமூக சிவில்
செயற்பாட்டாளரான திருமதி கோகிலவதனி கண்ணன் தெரிவிக்கையில் “நாங்கள் ஊழலை
ஒழிப்போம் என கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்களுக்கு நல்லாட்சி செய்வோம் என
கூறிய போதும் ஊழல் ஒழியவில்லை.பெயரளவில் மாத்திரமே கதை உள்ளது வாங்குறவன்
இலஞ்சம் வாங்கிக் கொண்டே இருக்கிறான். எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணம் செல்வதாக
இருந்தால் நாங்கள் ரூபா 5000 தொடக்கம் 10000 வரை பணத்தை மாற்றிக் கொண்டே செல்ல
வேண்டும்.
இல்லாவிட்டால் போக்குவரத்து பொலிஸார் தண்டப் பணத்துக்கான சிட்டையை
தருவதற்கு எழுதுவதாகவே சொல்வார்கள். இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை போன்று
எல்லாத் துறைகளிலும் ஊழல்கள் நிறைந்தே காணப்படுகிறது. வாக்குகளுக்காக பொய்
சொல்லி வருபவர்கள் தேர்தலின் பின் வாக்களித்தவர்களை தேடமாட்டார்கள் இப்படியே
இந்த அரசாங்கம் காலத்தை கடத்துகிறது” என்றார்.
இப்படியாக மக்கள் மத்தியில் ஆதரவைப் பெறுவதற்காகவும் வாக்குகளுக்காகவும் இது
போன்ற கருத்துக்களை வெளியிடுகின்றார்.
ஒட்டுமொத்தமாக ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்தும்
மக்கள் மத்தியில் தேர்தல் காலத்தில் மாத்திரம் வாக்குறுதிகளை அளித்த போதிலும்
நடைமுறையில் எதுவும் மக்கள் நலனுக்காக நடந்ததாக தெரியவில்லை என்பதை மக்களின்
கருத்துக்கள் மூலம் அறிய முடிகின்றது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு,
19 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
<!–
இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,
–>

