கொரிய (Korean) மொழிப் பரீட்சைக்கான திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் மே மாதம் 6 ஆம், 7 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சை முறையே மே மாதம் 10 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திகதி மாற்றம்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாகவே கொரிய மொழிப் பரீட்சைக்கான தேர்வுத் திகதிகள் மாற்றப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.